ஆடி மாத சிறப்பு தினங்களும்.. வழிபாட்டு பலன்களும்

ஆடிக் கார்த்திகை நாளில் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் வளங்கள் குவியும் என்பது ஐதீகம்.
ஆடி மாதத்தில் வழிபாடும், பலன்களும்
சிறப்பு அலங்காரத்தில் அம்மன்
Published on

வழிபாடுகளுக்கு உகந்த மாதமான ஆடி மாதம் பிறந்துள்ள நிலையில், கோவில்களில் திருவிழா களைகட்ட தொடங்கி உள்ளது. ஆடி மாதத்தில் ஆடி மாத பிறப்பு, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடிப் பெருக்கு, ஆடி கிருத்திகை, ஆடிப்பூரம், ஆடி அமாவாசை, ஆடி பவுர்ணமி என அனைத்தும் சிறப்புக்குரிய நாட்களாகும்.

குறிப்பாக, ஆடி மாதம் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்தது. அம்மனின் அருளை பெறுவதற்கு கூழ் வார்த்தல், நேர்த்திக்கடன் நிறைவேற்றுதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு படைத்தல், பால் குடம் சுமந்து வந்து அபிஷேகம் செய்தல், தீ மிதித்தல் ஆகிய வழிபாடுகளுக்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.

ஆடி மாதத்தில் சிறப்புக்குரிய முக்கிய நாட்களையும், அந்த நாட்களில் மேற்கொள்ளப்படும் வழிபாடுகளால் கிடைக்கும் பலன்களையும் பார்ப்போம்.

  • ஆடி மாதம் 13-ந் தேதி (29.7.2026) புதன்கிழமை ஆடிப் பவுர்ணமி. அன்றைய தினம் கிரிவலம் வந்தால் கீர்த்தி பெருகும். மலைவலம் வந்தால் மகத்துவம் உண்டு.

  • ஆடி மாதம் 18-ந் தேதி (3.8.2026) திங்கட்கிழமை ஆடிப் பெருக்கு நன்னாள் ஆகும். அன்றைய தினம் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும்.

  • ஆடி மாதம் 22-ந் தேதி (7.8.2026) வெள்ளிக்கிழமை ஆடிக் கார்த்திகை. அன்றைய தினம் விரதம் இருந்து வள்ளி மணாளனை வழிபட்டால் வளங்கள் குவியும்.

  • ஆடி மாதம் 27-ந் தேதி (12.8.2026) புதன்கிழமை அன்று ஆடி அமாவாசை வருகிறது. அன்றைய தினம் கடலில் நீராடுவதுடன், முன்னோர்களை வழிபடுவது சிறப்பான பலனைத் தரும். இயன்றவர்கள் ஆறு மற்றும் கடல்களில் நீராடி ஆலய வழிபாடு செய்யலாம்.

  • ஆடி மாதம் 29-ந் தேதி (14.8.2026) வெள்ளிக்கிழமை ஆடிப்பூரம் வருகிறது. ஆடிப்பூரம் அன்று அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் அமைதி கிடைக்கும். பொருளாதார நிலையும் உயரும்.

  • ஆடி மாதம் 31-ந் தேதி (16.8.2026) ஞாயிற்றுக்கிழமை அன்று நாக சதுர்த்தி வருகின்றது. ராகு - கேது ஆதிக்கம் உள்ளவர்கள், அன்றைய தினம் நாகநாதர் வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com