காவிரி துலா உற்சவம்.. மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் தேரோட்டம்

காவிரிக்கரை நாலுகால் மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளி கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.
மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.
தேரோட்டம்
Published on: 

மயிலாடுதுறை,

மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் நடைபெற்று வரும் காவிரி துலா உற்சவத்தின் ஒரு பகுதியாக தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது திவ்யதேசமும், பஞ்ச அரங்கத் தலங்களில் ஐந்தாவது ஸ்தலமுமான மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோவில் காவிரி துலா உற்சவம் கடந்த 8-ஆம் தேதி கருட கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்றது.

9ஆம் திருநாளான இன்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளியதும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தேர் வடம் பிடிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ‘கோவிந்தா, பரிமள ரங்கநாதா’ என்ற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்தது. வழி நெடுகிலும் பொதுமக்கள் பூஜைகள் செய்து வழிபட்டனர். பிற்பகல் காவிரிக்கரை நாலுகால் மண்டபத்தில் சுவாமிகள் எழுந்தருளி கடைமுக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X