செய்யூர் நாகாத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
செய்யூர் நாகாத்தம்மன் கோவில்
கும்பாபிஷேகம்
Published on

மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரில் நாகாத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 3 நாட்களாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித கலசங்கள் கிராம பொதுமக்கள் முன்னிலையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கோவிலை வலம் வந்து விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். விழாவை முன்னிட்டு கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com