சித்ரா பவுர்ணமி: திருச்செந்தூரில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

சித்ரா பவுர்ணமியான இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
சித்ரா பவுர்ணமி: திருச்செந்தூரில் 7 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
Published on

திருச்செந்தூர்,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவிழா, விடுமுறை, பண்டிகை மற்றும் சுபமுகூர்த்தம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் பக்தர்கள் வருவது வழக்கம்.

அந்த வகையில், மே தின விடுமுறை மற்றும் சித்ரா பவுர்ணமியான இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபா ராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை ஆகியவை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றன.

அதிகாலை முதலே திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் கடலிலும், நாழிக்கிணறு தீர்த்தத்திலும் புனித நீராடினர். பின்னர் நீண்ட வரிசையில் 7 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களால் நிரம்பியுள்ளது. பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com