

குன்னூர்,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள மேல் வண்ணாரப்பேட்டையில் பழமை வாய்ந்த பெரியபாளையத்தம்மன் திருக்கோவிலில் இன்று திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று பிள்ளையார் முதன்மை வேள்வி, நபகோல் விண்ணப்பம் காப்பு அணிதல், வாஸ்து பூஜை, கலச நிறுவல், முளைப்பாரி வழிபாடு, மருந்து சாத்துதல், கலச வழிபாடு, கலச வேள்வி ஆகியவை நடைபெற்றன.
இன்று காலை 6.00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, கருவிக்குட வேள்வி, நாடி வழி அருளூட்டம், இரண்டாம் கால வேள்வி பேரொளி வழிபாடு, வேள்வி குட புறப்பாடு, சதாசிவ வழிபாட்டுடன் விமான கலச நன்னீராட்டு, கருவறை திருமேனி நன்னீராட்டு, கடவுள்மங்களம் வழிபாடு ஆகியவை நடைபெற்றன.
விழாவில் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.