

திருமலை,
ஜனவரி மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை வழிபட தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்படுகிறது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த ஆண்டு (2027) ஜனவரி மாதம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தரிசன டிக்கெட்டுகள், தங்குமிட ஒதுக்கீடு விவரங்களை தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைகளான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவை டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன. அதற்கான இ.மெயில் குலுக்கல் பதிவு 21-ந்தேதி காலை 10 மணி வரை நடக்கிறது. அதற் கான கட்டணத்தை 21-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி மதியம் 12 மணி வரை பக்தர்கள் செலுத்தலாம்.
22-ந்தேதி மாலை 3 மணிக்கு மெய்நிகர் சேவைக்கான ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 23-ந்தேதி காலை 10 மணிக்கு அங்கப்பிரதட்சண தரிசனத்துக்கான டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அன்று காலை 11 மணிக்கு ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அன்று மாலை 3 மணிக்கு மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோயால் அவதிப்படும் பக்தர்களுக்கான தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய் யப்படுகின்றன.
24-ந்தேதி காலை 10 மணிக்கு ரூ.300 கட்டண சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் ஒதுக் கீடு செய்யப்படுகின்றன. 24-ந்தேதி மாலை 3 மணிக்கு திருமலை மற்றும் திருப்பதியில் தங்கும் வசதிக்காக தேவஸ் தான விடுதிகளில் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. எனவே பக்தர்கள் தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளம்: https://ttdevasthanams.ap.gov.in மூலம் மட்டுமே முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்படுகிறது.