திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு மாதம் நடக்கும் விழாக்கள் விபரம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் பல்வேறு விழாக்கள் நடக்கிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு மாதம் நடக்கும் விழாக்கள் விபரம்
Published on

திருமலை,

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

”திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) பல்வேறு விழாக்கள் நடக்கிறது. 14-ந்தேதி புரசைவாரி தோட்டத்துக்கு எழுந்தருள்கி றார். 16-ந்தேதி நாக சதுர்த்தி மற்றும் காஷ்யப மகரிஷியின் திருநட்சத்திரம். 17-ந்தேதி கருட பஞ்சமியை முன்னிட்டு கருட வாகன வீதிஉலா, 21-ந்தேதி மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா நினைவு நாள், 22-ந்தேதி பவித்ரோற் சவத்துக்கான அங்குரார்ப்பணம், 25-ந்தேதி பவித்ரோற்சவம் நிறைவடைகிறது.

28-ந்தேதி சிரவண பவுர்ணமி, கருட வாகன வீதிஉலா, வைகானச மகா முனி ஜெயந்தி, ஹயக்ரீவர் ஜெயந்தி, 29-ந்தேதி உற்சவர் மலையப்பசாமி வைகானசாரியார் சன்னதிக்கு எழுந்தருளும் வைபவம் நடக்கிறது.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com