

திருப்பதி,
ஆந்திர மாநிலம் திருப்பதியில் உலகப்புகழ்பெற்ற இந்து மதக்கடவுள் ஏழுமலையான் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், பக்தர்கள் பலரும் கோவிலுக்கு காணிக்கை, நன்கொடை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர் ஒருவர் ரூ. 1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த தொழிலதிபரும், ஐடி நிறுவன தலைமை செயல் அதிகாரியுமான திருமலா குமார் கனகமெடலா ஏழுமலையான் கோவிலுக்கு ரூ. 1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார். கோவிலை நிர்வகித்து வரும் திருமலை திருப்பதி தேவஸ்தான குழுவினரிடம் ரூ. 1 கோடிக்கான காசோலையை அவர் வழங்கினார்.