திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 4 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப் பட்டு உள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 4 மணி நேரத்தில் பக்தர்கள் தரிசனம்
Published on: 

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு காலை, மாலை 4 மாட வீதிகளில் சாமி வீதி உலா நடந்து வருகிறது. இதனால் திருப்பதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். சாதாரண பக்தர்களும் விரைந்து தரிசனம் செய்வதற்காக வைகுந்தம் வரிசை அறைகள் 1,2 ஆகியவை மற்றும் சாதாரண பக்தர்களின் வரிசைகள் ஒருங்கிணைந்த கட்டளை கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

4 மணி நேரத்தில் தரிசனம்

அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருவதால் வி.ஐ.பி தரிசனம், குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், வெளிநாடு வாழ் இந்தியர்கள், ராணுவத்தினர் மற்றும் பிற பிரிவினர்களுக்கான சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப் பட்டு உள்ளது. இதனால் நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் விரைவாக 3 முதல் 4 மணி நேரத்திற்குள் தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் மகிழ்ச்சி

பொதுவாக இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்ய குறைந்தது 12 மணி நேரம் முதல் அதிகபட்சமாக 30 மணி நேரம் வரை ஆகும். அப்போது வரிசையில் நிற்கும் பக்தர்கள் சில சமயங்களில் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவது உண்டு. ஆனால் தற்போது சிறப்பு தரிசனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் 4 முதல் 5 மணி நேரத்திலேயே சாமி தரிசனம் செய்துவிடுகின்றனர். இதனால் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com