ஏரல்: இடையர்காடு முத்தாரம்மன் கோவில் கொடை விழா

விழாவின் சிகர நிகழ்வான சாமக்கொடை நேற்று நள்ளிரவு 2.30 மணிக்கு நடைபெற்றது.
ஏரல் அருகே இடையர்காடு முத்தாரம்மன் கோவில் கொடை விழா
இடையர்காடு முத்தாரம்மன் கோவில் கொடை விழா
Published on: 

தென்திருப்பேரை,

ஏரல் அருகில் உள்ள இடையர்காடு கிராமத்தில் முத்தாரம்மன் கோவில் கொடை விழா, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை கால்நாட்டுதலுடன் தொடங்கியது.

அன்று முதல் தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை திருவிளக்கு பூஜையும், திங்கள் கிழமை சுமங்கலி பூஜையும் அதைத் தொடர்ந்து நவீன வில்லிசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கொடைவிழா நாளான நேற்று செவ்வாய்கிழமை காலை தாமிரபரணி ஆற்றிலிருந்து பக்தர்கள் மேளதாளத்துடன் புனித நீர் தீர்த்தம் எடுத்து வந்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் கணபதி ஹோமம், யாக பூஜைகள் செய்யப்பட்டு அம்மன் மற்றும் கோவில் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது.

மாலை 7 மணிக்கு பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊரை சுற்றி வந்து கோவிலை அடைந்தனர். கோவில் வளாகத்தில் கும்மியடித்து அம்மனை வழிபட்டனர். அதைத் தொடர்ந்து வில்லிசை நிகழ்ச்சியும் தொடர்ந்து சென்டை மேளம், நையாண்டி மேளம், கரகாட்டத்துடன் கொடைவிழா நடைபெற்றது. பக்தர்களுக்கு காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப்பட்டது.

சாமக்கொடை

கொடைவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று இரவு 12.20 மணிக்கு முத்தாரம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும் பூஜைகளும், இரவு 2.30 மணிக்கு சாமக்கொடையும் நடைபெற்றது.

அதைத் தொடர்த்து சப்பரத்தில் உற்சவர் முத்தாரம்மன் வாண வேடிக்கையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் தேங்காய் பழம் படைத்து அம்மனை வழிபட்டனர். கொடைவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com