

திருப்பதி,
திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் ஆகஸ்டு மாதம் 1, 8, 15, 22,29-ந்தேதி வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணிக்கு சீதா, ராமர், லட்சுமண ருக்கு அபிஷேகம், மாலை 5 மணிக்கு ஊஞ்சல் சேவை, தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு கோவிலின் நான்கு மாட வீதிகளில் திருச்சி உற்ச வம், 7-ந்தேதி வருடாந்திர பவித்ரோற்சவ விழா அங்குரார்ப்பணம், 8 முதல் 10-ந்தேதி வரை வருடாந்திர பவித்ரோற்சவம்.
11-ந்தேதி புனர்பூச நட்சத்திரத்தையொட்டி காலை 11 மணிக்கு சீதா-ராமர் திருக்கல்யாணம், மாலை 5.30 மணிக்கு உற்சவ மூர்த்திகள் நான்கு மாட வீதிகள் வழியாக ராமச்சந்திரா புஷ்கரணிக்கு திருச்சி வாகனத்தில் ஊர்வல மாக எடுத்துச் செல்லப்படுகிறார்கள். மாலை 6.30 மணிக்கு ஊஞ்சல் சேவை.
12-ந்தேதி அமாவாசை அன்று காலை 8.30 மணிக்கு சகஸ்ர கலசாபிஷேகம், இரவு 7 மணிக்கு அனுமந்த வாகன சேவை, 28-ந்தேதி பவுர்ணமி அன்று காலை 9.30 மணிக்கு அஷ்டோத்திர சத கலசாபிஷேகம், மாலை 5.30 மணிக்கு கோவிலின் நான்கு மாட வீதிகள் வழியாக ராமச்சந்திரா புஷ் கரணி வரை திருவீதி உலா, மேற்கண்ட நிகழ்ச்சிகளில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.