ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம்

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமை: நாமக்கல் ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பாலாபிஷேகம்
Published on

நாமக்கல்,

ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 1008 லிட்டர் பால் கொண்டு சிறப்பு பாலாபிஷேகம் நடைபெற்றது. சந்தனம், திருமஞ்சனம், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு, துளசி அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

நாமக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆஞ்சநேயரை தரிசித்து வழிபட்டனர். ஆடி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருவது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com