பங்குனி ஆராட்டு திருவிழாவையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொடியேற்றம்

சபரிமலை அய்யப்பன் கோவிலில் வருடாந்திர பங்குனி ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பங்குனி ஆராட்டு திருவிழாவையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொடியேற்றம்
Published on

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு சீசன் தவிர ஒவ்வொரு மாதமும் முதல் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் 10 நாட்கள் நடைபெறும் பங்குனி ஆராட்டு திருவிழாவும் ஆண்டுதோறும் கொடியேற்றத்துடன் கொண்டாடப்படுகிறது.

Also Read
தொகுதிப் பங்கீடு உடன்பாட்டில் மகிழ்வோடு கையெழுத்திட்டுள்ளோம் - எடப்பாடி பழனிசாமி
பங்குனி ஆராட்டு திருவிழாவையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொடியேற்றம்

இந்த நிலையில் இந்த ஆண்டின் பங்குனி ஆராட்டு திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு பகல் 11.30 மணிக்கு கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார். ஏப்ரல் 1-ந்தேதி வரை 10 நாட்கள் விழா நடைபெறும்.

Also Read
அடுத்தடுத்து அதிர்ச்சி தரும் தங்கம் விலை... ஒரே நாளில் 3 முறை மாற்றம்... சவரனுக்கு ரூ.5,360 அதிரடியாக உயர்வு
பங்குனி ஆராட்டு திருவிழாவையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொடியேற்றம்

விழா நாட்களில் 31-ந்தேதி வரை தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உச்ச பூஜைக்கு பின் உத்சவ பலியும், அத்தாள பூஜைக்கு பின் ஸ்ரீபூதபலி ஆகியவையும் நடக்க இருக்கிறது. 31-ந்தேதி இரவு 9 மணிக்கு சரம்குத்தியில் பள்ளி வேட்டை நிகழ்ச்சி நடைபெறும். ஏப்ரல் 1-ந்தேதி பகல் 11 மணிக்கு பம்பை ஆற்றில் அய்யப்பனுக்கு ஆராட்டு நடைபெற உள்ளது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு திருவிழா கொடி இறக்கப்பட்டு 10 நாட்கள் திருவிழா நிறைவுபெறும்.

Also Read
மனைவியுடன் தகராறு: திருமணமான ஒரே மாதத்தில் புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
பங்குனி ஆராட்டு திருவிழாவையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொடியேற்றம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com