திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் பிரம்மாண்ட புஷ்ப யாகம்.. 22-ம் தேதி நடக்கிறது

பிரம்மோற்சவங்கள் மற்றும் தினசரி வழிபாடுகளின்போது ஏதேனும் அறியாமல் குறைபாடுகள் ஏற்பட்டிருந்தால், அதற்கான பரிகாரமாகவே இந்த புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது.
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவில், புஷ்ப யாகம்
புஷ்ப யாகம்
Published on

திருப்பதி,

திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோவிலில் வரும் 22ஆம் தேதி பிரம்மாண்டமான புஷ்ப யாகம் நடைபெறவுள்ளது. இவ்விழாவின் ஒரு பகுதியாக, 21ஆம் தேதி மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை சேனாதிபதி உற்சவம் மற்றும் அங்குரார்ப்பணம் ஆகியவை நடைபெறும்.

22ஆம் தேதி காலை 9.30 மணிக்கு ஸ்நாபன திருமஞ்சனம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை புஷ்ப யாகம் நடைபெறும். இதில் மூலவர் கோந்தராஜ சுவாமிக்கு பல்வேறு வகையான நறுமண மலர்கள் மற்றும் துளசி போன்ற புனிதமான இலைகளால் புஷ்பார்ச்சனை எனப்படும் புஷ்ப யாகம் நடத்தப்படுகிறது. மாலை 6 மணிக்கு பிரம்மாண்டமான வீதி உலா (வீதி உற்சவம்) நடைபெறும்.

புஷ்ப யாகம் ஏன்..?

வருடாந்திர பிரம்மோற்சவங்கள் மற்றும் தினசரி வழிபாடுகளின்போது ஏதேனும் அறியாமல் குறைபாடுகள் ஏற்பட்டிருந்தால், அதற்கான பரிகாரமாகவே இந்த புஷ்ப யாகம் நடத்தப்படுவதாக கோவில் அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.

தம்பதியர் ரூ. 516 மதிப்பிலான டிக்கெட்டைப் பெற்று இந்த புனித சேவையில் பங்கேற்று பகவானின் அருளைப் பெறலாம் என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com