கவலை நீக்கும் கால பைரவர் வழிபாடு

காலபைரவரை பக்தியுடன் வழிபட்டால், வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கி, நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
கால பைரவர்
கால பைரவர்
Published on

அக்னி ஜுவாலையை தலையில் தாங்கி, சூலத்தை கரங்களில் தாங்கி, நாய் வாகனத்துடன் காட்சி தருபவர் காலத்தை கட்டுப்படுத்தும் காலபைரவர். அவர் சிவபெருமானின் உக்கிர வடிவமாக இருந்து, பக்தர்களை பாதுகாத்து நல்வழி காட்டுபவர்.

காலபைரவரை தொடர்ந்து வழிபட்டால் நினைத்த காரியம் விரைவில் கைகூடும், கண் திருஷ்டி மற்றும் தீய சக்திகள் அகலும், பில்லி, சூனியம் போன்றவை அணுகாது, எமபயம் நீங்கி மன அமைதி கிடைக்கும், வறுமை நீங்கி செல்வம் பெருகும், கவலைகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும் என்பது நம்பிக்கை.

கால பைரவரை வழிபட சிறந்த நாள்: அஷ்டமி திதி (தேய்பிறை அஷ்டமி மிகவும் விசேஷம்), அமாவாசை நாட்கள்

இரவு நேர பூஜை: இரவு 8 மணி 10 மணி வரை மிகவும் சக்திவாய்ந்தது

வழிபாட்டு முறைகள்: வில்வ இலை, செவ்வரளி மலர் அர்ப்பணிக்கவேண்டும். தீபம் ஏற்றி “ஓம் காலபைரவாய நம” என்ற மந்திரத்தை கூறி பிரார்த்தனை செய்யவேண்டும். கருப்பு நிற நாய்க்கு உணவு அளித்தால் சிறப்பு.

Also Read
திருப்பதி ஏழுமலையானை வழிபட ஜூன் மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு
கால பைரவர்
X

Daily Thanthi
www.dailythanthi.com