திருப்பதி ஏழுமலையானை வழிபட ஜூன் மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு

மெய்நிகர் சேவைகள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட தரிசன ஒதுக்கீடுகள் 21-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.
திருப்பதி ஏழுமலையானை வழிபட ஜூன் மாதத்துக்கான தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியீடு
Published on

திருப்பதி,

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் ஜூன் மாதம் வழிபட ஆன்லைனில் பல்வேறு தரிசன டிக்கெட்டுகள் நாளை (புதன்கிழமை) முதல் வெளியிடப்படுகின்றன. அதில் ஆர்ஜிதசேவை டிக்கெட்டுகளான சுப்ர பாதம், தோமாலா சேவை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவைகளுக்கான தரிசன டிக் கெட்டுகள் நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

அந்தச் சேவைகளுக்கான எலக்ட்ரானிக்ஸ் குலுக்கல் பதிவு 20-ந்தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் செய்யலாம். டிக்கெட்டுகள் ஒதுக் கீடு செய்யப்பட்டவர்கள் 20 முதல் 22-ந்தேதி மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தினால் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படும். அதேபோல் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, ஜேஷ்டாபிஷேகம் ஆகிய சேவைகளுக்கான தரிசன டிக்கெட்டுகள் 21-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும்.

மெய்நிகர் சேவைகள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட தரிசன ஒதுக்கீடுகள் 21-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். அங்கப்பிரதட்சண டோக்கன்கள் 23-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியி டப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகள் 23-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்டகால நோயால் அவதிப்படும் பக்தர்களுக்கான இலவச சிறப்பு தரிசனத்துக்கான டோக்கன்கள் 23-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டான ரூ.300 கட்டண டிக்கெட் 24-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும்.

திருமலை மற்றும் திருப்பதியில் தேவஸ்தானத்துக்கு சொந்தமான விடுதி களில் உள்ள அறைகளுக்கான முன்பதிவு 24-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். பக்தர்கள் https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளம் மூலம் ஸ்ரீவாரியின் ஆர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை முன்ப திவு செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com