அலங்காநல்லூரில் வெக்காளியம்மன் கோவில் களரி உற்சவ விழா

களரி உற்சவ விழாவில் தீச்சட்டி பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மாசி களரி உற்சவ விழாவில் தீச்சட்டி, பால்குடம் எடுத்து வந்து வந்த பக்தர்கள்.
மாசி களரி உற்சவ விழாவில் தீச்சட்டி, பால்குடம் எடுத்து வந்து வந்த பக்தர்கள்.
Published on

அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், கேட்டுக்கடையில் அமைந்துள்ள ஸ்ரீ வெக்காளியம்மன் கோவிலில் மாசி களரி உற்சவ விழா நடந்தது. மூன்று நாட்கள் நடந்த இந்த உற்சவ விழாவில் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் மேற்கொண்டனர்.

சிறப்பு யாகசாலை பூஜையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட 16 வகை ஹோமங்கள் நடந்தன. தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவில் அலங்காநல்லூர் மற்றும் சுற்று வட்டாரங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Also Read
மாதேஸ்வரா கோவில் குண்டம் விழா: பூசாரிகள் மட்டுமே குண்டம் இறங்கினர்
மாசி களரி உற்சவ விழாவில் தீச்சட்டி, பால்குடம் எடுத்து வந்து வந்த பக்தர்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com