கல்லாமொழி முத்தாரம்மன் கோவில் கொடை விழா- 108 பால்குட ஊர்வலம்

விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கல்லாமொழி முத்தாரம்மன் கோவில் கொடை விழா- 108 பால்குட ஊர்வலம்
பால்குட ஊர்வலம்
Published on: 

குலசேகரன்பட்டினம்,

கல்லாமொழி முத்தாரம்மன் கோவில் கொடை விழாவின் ஒரு பகுதியாக 108 பால்குட ஊர்வலம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

தூத்துக்குடி மாவட்டம், கல்லாமொழி முத்தாரம்மன் கோவில் கொடை விழா நேற்று மாலை 201 திருவிளக்கு பூஜையுடன் துவங்கியது. அன்றைய தினம் இரவு மாகாப்பூ அலங்கார தீபாராதனை மற்றும் வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று காலை 6 மணிக்கு விநாயகர் பூஜை நடைபெற்றது. காலை 8 மணிக்கு நையாண்டி மேளம், கரகாட்டம், செண்டா மேளம், வாணவேடிக்கையுடன் அதிசய விநாயகர் கோவிலில் இருந்து 108 பால்குடம் பவனி நடந்தது. அதன்பின் பெண்கள் மஞ்சள் பெட்டி எடுத்து ஊர் சுற்றி வருதல், வில்லிசை நிகழ்ச்சியைத் தொடர்ந்து, காலை 10.30 மணிக்கு அம்மனுக்கு 108 பால்குடம் அபிஷேகம் நடைபெற்றது.

கும்பம் வீதி உலா

காலை 11.30 மணிக்கு பெருமாள் சுவாமி கோவிலில் சிறப்பு பூஜையும், மதியம் 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, கும்பம் வீதி உலா வருதலும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

இரவு 8.30 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, கும்பம் வீதி உலா வருதல் நடந்தது. நாளை மறுநாள் திருவிழா நிறைவு பெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com