வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்

கந்த சஷ்டி விழாவின் சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 15ஆம் தேதி நடைபெறுகிறது.
வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றம்
கந்த சஷ்டி விழா கொடியேற்றம்
Published on: 

வால்பாறை,

வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 14 ஆம் ஆண்டு கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிகழ்வை முன்னிட்டு வேல்மாறல் வழிபாடு, சத்ரு சம்ஹார திரிசதி ஹோமம் ஆகிய சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கான சிறப்பு பூஜைகள் நடத்தி, திருவிழாவிற்கான கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ‘அரோகரா’ முழக்கம் எழுப்பியபடி தரிசனம் செய்தனர்.

சூரசம்ஹாரம்

வருகின்ற 16 ஆம் தேதி வரை கந்த சஷ்டி திருவிழா கொண்டாடப்படுகிறது. விழா நாட்களில் உற்சவர் சிறப்பு புஷ்பாபிஷேகம், மஹா தீபாராதனை, சுவாமி திருவீதி உலா என சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு வால்பாறை புதிய பஸ் நிலையம் பகுதியில் சூரசம்ஹார நிகழ்வு நடைபெறுகிறது. 16 ஆம் தேதி திங்கட்கிழமை மதியம் 12.00 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்று மாலை 6.00 மணிக்கு மேல் சுப்பிரமணிய சுவாமி வள்ளி, தெய்வானையுடன் முக்கிய பகுதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

X