தீபாவளி, தன்தேராஸ் நாளில் காசி விஸ்வநாதர் கோவில் திறந்திருக்கும்.. பக்தர்கள் வழக்கம்போல் தரிசனம் செய்யலாம்

பக்தர்கள் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதியையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
காசி விஸ்வநாதர் கோவில்
காசி விஸ்வநாதர் கோவில்
Published on: 

வாரணாசி,

தீபாவளி மற்றும் தன்தேராஸ் பண்டிகைகளின் போது வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் பக்தர்களுக்காகத் திறந்திருக்கும் என்றும், தரிசனத்திற்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவும் தொடர்ந்து நடைபெறும் என்றும் கோவில் நிர்வாக அதிகாரி ஷம்பு சரண் தெரிவித்தார்.

ஆன்லைன் முன்பதிவு வசதி

இதுபற்றி அவர் மேலும், கூறுகையில், ‘தீபாவளி மற்றும் தன்தேரஸ் பண்டிகை நாட்களில் பக்தர்கள் வழக்கம்போல கோயிலுக்குச் செல்லலாம், ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதியையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இருப்பினும், நவம்பர் 9-ஆம் தேதி பிற்பகல் நடைபெறும் 'ஷ்ரிங்கார் போக் ஆரத்தி' முதல், நவம்பர் 10-ஆம் தேதி மாலை நடைபெறும் 'சப்தரிஷி ஆரத்தி' வரை அனைத்து வகை டிக்கெட் முன்பதிவுகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கும்

அன்னகூட திருவிழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காகவே, இந்த குறிப்பட்ட காலத்திற்கு மட்டும் டிக்கெட் முன்பதிவுகள் நிறுத்தப்படுகின்றன. மற்ற நாட்களில் கோயிலில் வழக்கமான அனைத்து ஏற்பாடுகளும் சேவைகளும் தொடர்ந்து நடைபெறும்” என்றார்.

தன்தேராஸ் என்றால் என்ன?

தன்தேராஸ் அல்லது தன திரயோதசி என்பது வட இந்தியாவில் தீபாவளித் திருவிழாவின் தொடக்க நாளாகக் கொண்டாடப்படும் ஒரு முக்கிய இந்து பண்டிகையாகும். இந்து நாட்காட்டியின்படி, ஐப்பசி அல்லது கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை திரயோதசி திதியில் இந்த பண்டிகை வருகிறது. இந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், நவம்பர் 6-ம் தேதி தன்தேராஸ் பண்டிகை வருகிறது. வட இந்திய கலாச்சாரத்தில் இந்த நாள் செல்வம், ஆரோக்கியம் மற்றும் செழிப்பைக் கொண்டுவரும் மிக முக்கியமான நாளாகக் கருதப்படுகிறது.

X