கயத்தாறு காந்தாரி அம்மன் கோவில் கொடை விழா: முளைப்பாரி ஊர்வலம்

திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
கயத்தாறு காந்தாரி அம்மன் கோவில் திருவிழா
முளைப்பாரி ஊர்வலம்
Published on

கயத்தாறு,

கயத்தாறில் அருள்மிகு ஶ்ரீ காந்தாரி அம்மன் திருக்கோவில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. தினமும் காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று முன்தினம் கொடி அழைப்பு நடைபெற்றது. விழாவின் எட்டாம் நாளான நேற்று காலையில் பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. சுமார் 150 பேர் பால்குடங்களும், சுமார் 200 பேர் முளைப்பாரியும் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இந்த ஊர்வலம் ரத வீதிகள் வழியாக கோவிலை அடைந்தது.

மதியம் 12 மணிக்கு மத்தியான கொடை விழாவைத் தொடர்ந்து, 12.30 மணி முதல் மாலை 5.50 வரை அன்னதானம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு வடக்கத்தி அம்மன் கோயில் மாவு சூரை நிகழ்ச்சி நடைபெற்றது. 7 மணிக்கு முளைப்பாரி கும்மி பாடல், 10 மணியளவில் வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்பின்னர் பொங்கல் வைக்கும் வைபவம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com