கழுகுமலை பங்குனி திருவிழா: தேரோட்டத்தில் சாதி அடையாள பனியன்களுடன் பங்கேற்க தடை

கழுகாசலமூர்த்தி கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழாவில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தேரோட்டம் (கோப்பு படம்)
தேரோட்டம் (கோப்பு படம்)
Published on

கழுகுமலை,

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா வருகிற 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வருகிற 31-ந் தேதி தேரோட்டம் விமரிசையாக நடக்கிறது. இதையொட்டி விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், கழுகாசலமூர்த்தி கோவிலில் பங்குனி உத்திர தேர் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக கழுகுமலை போலீஸ் நிலையத்தில் ஆலோசனை கூட் டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோவில்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெகநாதன் தலைமை தாங்கினார். கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழுகாசலமூர்த்தி கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழாவில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மேலும், தேரோட்டத்தின்போது பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வாகனங்களில் குடிநீர் வினியோகிக்கவும், முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கவும், பக்தர்களுக்கு மருத்து வசதி, கூடுதல் பஸ்கள் இயக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கடந்த பிப்ரவரி 1-ந் தேதி தைப்பூச திருவிழாவில் தேர் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலியான சம்பவத்தால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, பங்குனி தேரோட்டத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது, மது அருந்தியவர்கள் தேரோட்டத்தில் பங்கேற்க அனுமதி கிடையாது, தடிபோடுபவர்களும் மது அருந்திவிட்டு பங்கேற்க தடை விதிக்கப்படும், சாதி அடையாளத்துடன் பனியன்கள் அணிந்துகொண்டும், ரிப்பன்களை தலையில் கட்டி கொண்டும் பங்கேற்க தடைவிதிப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் வருவாய் ஆய்வாளர் மாலதி, கிராம நிர்வாக அதிகாரி கார்த்திகேயன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Also Read
கம்பமாக காட்சி தரும் கலியுக வரதராஜப் பெருமாள்
தேரோட்டம் (கோப்பு படம்)

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com