

சீர்காழி,
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பிடாரி வடக்கு வீதிகள் சட்டை நாதர் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட குமரக்கோட்டம் எனும் குமரக் கோவில் அமைந்துள்ளது. இங்கு முருகப்பெருமான், வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். இக்கோயிலில் புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மஞ்சள், திரவிய பொடி, இளநீர், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம் முதலான 21 வகை திரவியப்பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள செநதில் முருகன் கோவிலில் கிருத்திகை சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் உட்பிரகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.