சோழவந்தான் அருகே தென்கரை உச்சிமாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக விழா
கும்பாபிஷேக விழா
Published on

சோழவந்தான்,

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே தென்கரை உச்சிமாகாளி அம்மன், ஞான சித்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததையடுத்து நேற்று காலை 11.20 மணியளவில கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கருடன் வானத்தில் வட்டமிட்டது. தொடர்ந்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Also Read
விடுமுறை தினம்: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் குவிந்த பக்தர்கள்
கும்பாபிஷேக விழா

கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியை தொடர்ந்து அகிலாண்டேஸ்வரி கோவில் முன்பு அன்னதானம் நடைபெற்றது. இரவு சிம்ம வாகனத்தில் உச்சி மாகாளியம்மன் தென்கரை கிராமத்தின் பல்வேறு பகுதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Also Read
பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் திருவிளக்கு பூஜை
கும்பாபிஷேக விழா

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com