ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் லட்ச வில்வார்ச்சனை தொடங்கியது

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு ஏராளமான பெண்கள் ஆகாச தீபம் ஏற்றி வழிபட்டனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் லட்ச வில்வார்ச்சனை
வில்வார்ச்சனை
Published on: 

ஸ்ரீ காளஹஸ்தி,

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் லட்ச வில்வார்ச்சனை தொடங்கியது. மேலும் பெண்கள் ஆகாசதீபம் ஏற்றியும் வழிபாட்டை தொடங்கினர்.

நித்ய லட்சார்ச்சனை

தெலுங்கு வருடத்தின் எட்டாவது மாதம் கார்த்திகை மாதம். பவுர்ணமி நாளில், கிருத்திகை நட்சத்திரத்துடன் அதாவது சந்திரன், கார்த்திகை நட்சத்திரத்துடன் சேர்ந்து வரும் நாள் என்பதால் இந்த மாதம் கார்த்திகை என பெயர் பெற்றது.

இதனையொட்டி ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நித்ய லட்சார்ச்சனை தொடங்கியது. கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் (உற்சவ மூர்த்திகள்) ஞானப்பிரசுனாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் முன்னிலையில் லட்ச குங்குமார்ச்சனை மற்றும் லட்ச வில்வார்ச்சனையை கோவில் செயல் அலுவலர் வெங்கடேசுலு தொடங்கி வைத்தார். லட்சார்ச்சனையை கோவில் பிரதான அர்ச்சகர் சம்மந்தம் குருக்கள், கருணாகர் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் நடத்தினர்.

சிவ வழிபாட்டிற்கு உகந்த மாதம்

கார்த்திகை மாதம் சிவ வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான மாதமாக இருப்பதால், இறைவனுக்கு வில்வத்தாலும், அன்னைக்கு குங்குமத்தாலும் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்படுகின்றன. உலக நன்மைக்காகவும், அனைத்து மக்களின் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்காகவும் பிரார்த்தனைகள் நடந்தன.

இதில் கோவிலின் உதவி செயல் அதிகாரி வித்யாசாகர் ரெட்டி, மேற்பார்வையாளர் நாகபூஷணம் யாதவ் மற்றும் கோவில் பணியாளர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு ஆன்மிக அனுபவத்தை வழங்கும் வகையில், கார்த்திகை மாதத்தில் கோவிலில் சிறப்புப் பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆகாச தீபம்

இந்தமாதமானது மாதமானது சிவன் மற்றும் விஷ்ணு இருவரையும் வழிபடுவதற்கு மிகவும் உகந்த மாதமாக கார்த்திகையில் ஆறு மற்றும் நீர் நிலைகளில் நீராடுவதற்கும் பல்வேறு சடங்குகளுக்கும் மங்களகரமானதாக கருதப்படுவதாக கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதத்தை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள கோட்ட மண்டபம் அருகே ஆகாச தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி ஏராளமான பெண்கள் முதல் நாளிலிருந்தே கோவிலில் ஆகாச தீபம் ஏற்றி வழிபடத் தொடங்கினர். மாத இறுதிவரை இந்த தீபம் ஏற்றப்படுகிறது.

X