கபிலேஸ்வரர் கோவிலில் லட்ச வில்வார்ச்சனை

வில்வார்ச்சனையைத் தொடர்ந்து மாலையில் உற்சவ மூர்த்திகள் நான்கு மாட வீதிகளில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் லட்ச வில்வார்ச்சனை சேவை நடைபெற்றது
லட்ச வில்வார்ச்சனை
Published on: 

திருப்பதி,

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாதத்தை முன்னிட்டு சுவாமிக்கு லட்ச வில்வ இலை அர்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது.

பிரார்த்தனை

அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதத்துடன் நிகழ்வுகள் தொடங்கின. அதனைத் தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம் மற்றும் அர்ச்சனை நடைபெற்றன. காலை 7 மணி முதல் மதியம் 1.30 மணி வரை, ஒரு லட்சம் வில்வ இலைகளைக் கொண்டு சுவாமிக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. உலக நலன், அனைத்து மக்களின் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்துக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.

மாலை 6 மணிக்கு, ஸ்ரீ சந்திரசேகர சுவாமி மற்றும் அம்பாள் ஆகிய உற்சவ மூர்த்திகள், நான்கு மாட வீதிகளில் பிரம்மாண்டமான ஊர்வலமாக எழுந்தருளி அருள்பாலித்தனர்.

இந்த நிகழ்வில் கோவில் துணை நிர்வாக அதிகாரி நாகரத்னா, உதவி நிர்வாக அதிகாரி குமாரி தேவி, கண்காணிப்பாளர் சந்திரசேகர், கோயில் அர்ச்சகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

X