மதுரை புதூர் புனித லூர்து அன்னை ஆலய திருவிழா தொடங்கியது

திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்
லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்
Published on

மதுரை கோ.புதூர் புனித லூர்து அன்னை ஆலயத்தின் 106-ம் ஆண்டு திருவிழா, கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது. மதுரை உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் அந்தோணிபாப்பு சாமி தலைமை தாங்கி, கொடியேற்றி வைத்தார். இதனை தொடர்ந்து, ஆடம்பர கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

பங்குத்தந்தை ஜார்ஜ், உதவி பங்குத்தந்தையர்கள் பாக்கியராஜ், பிரபு, அஜிலாஸ் மற்றும் சலேசியர்கள், அருட் சகோதரர்கள், அருட் சகோதரிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கொடியேற்ற நிகழ்ச்சியில் மதுரை, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல பங்குகளில் இருந்து ஏராளமான இறைமக்கள் கலந்து கொண்டு, அன்னையின் ஆசீர் பெற்று சென்றார்கள்.

முன்னதாக, புதிய ஆலயத்தின் ஆலய மணியை அர்ச்சித்து ஆலயத்திற்கு அர்ப்பணம் செய்யப்பட்டது. வருகிற 11-ம் தேதி புதிய ஆலய கோபுர திருச்சிலுவை அர்ச்சிப்பு நிகழ்ச்சியும், 13-ம் தேதி நற்கருணை பவனியும், 14-ம் தேதி தேர் பவனியும், 15-ம் தேதி பொங்கல் விழாவும் நடக்கிறது.

Also Read
வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர் பவனி
லூர்து அன்னை ஆலய திருவிழா கொடியேற்றம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com