

சீர்காழி,
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே, ஆலஞ்சேரி கிராமத்தில் பழமை வாய்ந்த அகஸ்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. அகத்திய மகரிஷி பூஜை செய்து வழிபட்ட சிறப்பு வாய்ந்த இந்த தலத்தில் மஹா சங்கல்ப மஹா யாகம் நடைபெற்றது. வெப்பம் தணிந்து மழை வேண்டியும், உலக மக்கள் அமைதியுடன் வாழ வேண்டியும் இந்த சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
இதற்காக ஆலயத்தில் 57 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு புனித நீர் கடங்கள் வைக்கப்பட்டன. யாக குண்டத்தில் ஏராளமான வேள்விப் பொருட்கள் இடப்பட்டு யாகம் நடைபெற்றது. யாகத்தின் நிறைவில் பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நாடி செல்வமுத்து குமரன், நாடி மாமல்லன் அருள் குருக்கள் மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.