

தென்திருப்பேரை,
தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை பேரூராட்சி மணல்மேடு இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட சப்பாணி மாட சுவாமி திருக்கோவில் கொடை விழா விமரிசையாக நடைபெற்றது.
கொடை விழாவின் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு 7 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நிகழ்ச்சி இரவு 9 மணிக்கு குடி அழைப்பு, அதை தொடர்ந்து சிறப்பு பூஜை மற்றும் நவீன வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது.
நேற்று செவ்வாய்க்கிழமை பகல் 12 மணியளவில் மதிய கொடையும், இரவு நவீன வில்லிசை நிகழ்ச்சியும், இரவு 10 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை தீபாராதனையும், இரவு 12 மணிக்கு சாமக்கொடையும் நடைபெற்றது. கொடை விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.