அலங்காநல்லூர் அருகே சேவுக பெருமாள் கோவில் மண்டலாபிஷேக விழா

யாகசாலை பூஜைகளைத் தொடர்ந்து புனித நீரால் சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
மண்டலாபிஷேக விழா
மண்டலாபிஷேக விழா
Published on

அலங்காநல்லூர்,

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஶ்ரீதேவி பூதேவி சமேத சேவுக பெருமாள் திருக்கோவிலில் மண்டல அபிஷேக விழா நடந்தது. இதையொட்டி நடைபெற்ற சிறப்பு யாகசாலை பூஜையில் மங்கள இசை முழங்க பல்வேறு ஹோமங்கள், அதனைத் தொடர்ந்து மஹா பூர்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து புனித நீர் கலசங்களுடன் கோவிலை சுற்றி வலம் வந்து, சுவாமி சிலைகளுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் திருக்கோவிலுக்கு வருகை தந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Also Read
கவலை நீக்கும் கால பைரவர் வழிபாடு
மண்டலாபிஷேக விழா
X

Daily Thanthi
www.dailythanthi.com