தேய்பிறை அஷ்டமி: கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

கால பைரவருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர்
சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர்
Published on

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு மாசி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், கரும்புச்சாறு, விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

அதேபோல் பரமத்திவேலூர் காவிரி கரையில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயம், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் பழைய காசி விஸ்வநாதர் ஆலயம், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவில், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசிவிஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர்,

பரமத்திவேலூர் எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், வல்லப விநாயகர் கோயில் உள்ள பானலிங்கேஸ்வரர், வெங்கரையில் உள்ள ஜலகண்டேஸ்வரர், ஜேடர்பாளையத்தில் உள்ள ஆனந்த ஈஸ்வரர், உள்ளிட்ட கோயில்களில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Also Read
மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 19-ந்தேதி தொடங்குகிறது
சிறப்பு அலங்காரத்தில் கால பைரவர்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com