மைசூருவில் ஜம்பு சவாரி ஊர்வலம்... இறுதிக்கட்டத்தை எட்டிய தசரா விழா

ஜம்பு சவாரி ஊர்வலத்தை முன்னிட்டு மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மைசூரு தசரா விழா, ஜம்மு சவாரி ஊர்வலம்
ஜம்மு சவாரி ஊர்வலம்
Published on: 

மைசூரு,

மைசூரு தசரா விழா கொண்டாட்டங்களின் நிறைவாக 'ஜம்பு சவாரி' என்னும் தசரா ஊர்வலம் இன்று நடைபெற்றது.

தசரா விழா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா சாமுண்டி மலையில் அமைந்துள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் கடந்த 11-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. விழா நாட்களில் கர்நாடகாவின் கலாச்சாரப் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையிலான கலைநிகழ்ச்சிகள் மற்றும் கலாசார நிகழ்வுகள் விமரிசையாக நடைபெற்றன.

இந்நிலையில் தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான பிரமாண்டமான 'ஜம்பு சவாரி' என்னும் தசரா ஊர்வலம் இன்று நடைபெற்றது. சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடையுள்ள தங்க அம்பாரியை, பிரசாந்த் யானை கம்பீரமாக சுமந்து செல்ல, மற்ற யானைகளும் உடன் அணிவகுத்து சென்றன.

ஊர்வலத்தில் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகள், அரசுத் துறைகள் மற்றும் அண்டை மாநிலங்களின் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையில் அலங்கார ஊர்திகள் மற்றும் ஏராளமான நாட்டுப்புறக் கலைக் குழுவினர் பங்கேற்றனர். முதல் முறையாக இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையை பிரதிபலிக்கும் பிரத்யேக அலங்கார ஊர்திகளும் இடம்பெற்றன.

ஜம்பு சவாரி ஊர்வலத்தை முன்னிட்டு மைசூரு நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கர்நாடகா மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் என லட்சக்கணக்கானோர் மைசூரில் குவிந்துள்ளனர்.

மைசூரு அரண்மனையில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வன்னிமண்டபம் மைதானத்தை அடைகிறது. அங்கு நடக்கும் தீப்பந்த சாகச நிகழ்ச்சி மற்றும் லேசர் காட்சிகளுடன் தசரா விழா நிறைவு பெறுகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com