நாகை: இடையாத்தங்குடி ஆஞ்சநேயர் கோவிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு

அபய வரத ஆஞ்சநேயருக்கு 16 வகையாக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் அபய வரத ஆஞ்சநேயர்
சிறப்பு அலங்காரத்தில் அபய வரத ஆஞ்சநேயர்
Published on

நாகை,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் இடையாத்தங்குடியில் அபய வரத ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், அமாவாசையை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு இன்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

அமாவாசை பூஜைக்காக கோவில் எதிரில் யாக சாலை அமைக்கப்பட்டு யாக சாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையாக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com