நாகை: கயத்தார் விஸ்வநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம்

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
கயத்தார் விஸ்வநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம்
கயத்தார் விஸ்வநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம்
Published on

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம், ஏனங்குடி ஊராட்சி கயத்தூர் கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் உள்ளது. இங்கு சித்தி விநாயகர், அய்யனார், காளியம்மன் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். இக்கோவிலில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் (மகா குடமுழுக்கு) நடத்த அக்கிராமத்தினர், மருளாளிகள் உள்ளிட்டோர் முடிவு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

திருப்பணிகள் முடிந்து இன்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் அனுக்ஞை, விநாயகர் பூஜை, பூர்வாங்க பூஜை, யாகசாலை பூஜைகள் நடந்தன. நேற்று கோபூஜை, யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது.

இன்று காலையில் யாக சாலை பூஜை, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. அதன்பின்னர் காலை 8.15 மணி வரை விமான கும்பாபிஷேகமும், மூலவர் கும்பாபிஷேகமும் நடந்தது.

தொடர்ந்து சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் கயத்தார் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Also Read
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் பங்குனி பெருவிழா தொடங்கியது
கயத்தார் விஸ்வநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம்

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com