நாகை: சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

பிரதோஷ பூஜைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகை காயாரோகண சுவாமி கோவில், நந்தியம்பெருமான்
நந்தியம்பெருமான்
Published on

நாகப்பட்டினம்,

பிரதோஷ தினத்தை முன்னிட்டு சிவாலயங்களில் இன்று நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.

நாகை காயாரோகண சுவாமி கோவிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு மஞ்சள் பொடி, திரவியம் பொடி, பச்சரிசி மாவு, தேன், பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், விபூதி உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

அதேபோல் மலையீஸ்வரன் கோவில், அமரநந்தீஸ்வரர், மெய் கண்ட மூர்த்தி கோவில், அழகிய நாதர் கோவில், நடுவதீஸ்வரர் கோவில், வீரபத்திர சுவாமி கோவில், சொக்கநாதர் கோவில், வெளிப்பாளையம் அகஸ்தீஸ்வரர் கோவில், நாகூர் நாகநாதர் கோவில், வடக்கு பொய்கைநல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோயில், எட்டுக்குடி முருகன் கோவில் உள்ளிட்ட கோயில்களில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com