நாமக்கல்: கிராயூர் மாரியம்மன் கோவில் திருவிழா... மாவிளக்கு பூஜை

ஏராளமான பெண்கள் மாவிளக்குகளை ஊர்வலமாக கொண்டு வந்து அம்மன் முன் வரிசையாக வைத்து பூஜை செய்தனர்.
மாவிளக்கு பூஜை
மாவிளக்கு பூஜை
Published on

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே கிராயூர் மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. பூச்சாட்டுதலைத் தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வந்தது.

நேற்று கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மன் முன் படையல் போட்டு பொங்கல் பூஜை செய்தனர். அதே போல் ஏராளமான பெண்கள் மாவிளக்குகளை ஊர்வலமாக கொண்டு வந்து அம்மன் முன் வரிசையாக வைத்து மாவிளக்கு பூஜை செய்தனர். அதனைத் தொடர்ந்து வாணவேடிக்கை நடைபெற்றது.

முன்னதாக மாரியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com