பாலப்பட்டி கதிர்மலை முருகன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை

விளக்கு பூஜையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்
குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்
Published on

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம், பாலப்பட்டி கதிர்மலை முருகன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர்.

விளக்கு பூஜையை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com