

திருப்பதி.
திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோவிலில் ஒரு மாத காலம் கார்த்திகை ஹோம மகோற்சவம் நடக்கிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று நவக்கிரக ஹோமம் பக்தி பாரம்பரிய சடங்குகளுடன் நடந்தது.
வேதப் பண்டிதர்கள் வேத மந்திரங்களை முழங்க பூர்ணாஹுதி, கலச உத்வாசனம், மகா சாந்தி அபிஷேகம் மற்றும் நவக்கிரக கலசாபிஷேகம் உள்ளிட்ட சடங்குகள் நடந்தன. மாலை தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு கலச ஸ்தாபனமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது.
ஹோமத்தில் கோவில் துணை அதிகாரி நாகரத்னா, உதவி அதிகாரி குமாரி தேவி, கண்காணிப்பாளர் சந்திரசேகர் மற்றும் கோவில் அர்ச்சகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர். ஹோம மகோற்சவத்தில் இன்று (திங்கட்கிழமை) தட்சிணாமூர்த்தி சுவாமி ஹோமம் நடக்கிறது.