நவராத்திரி பிரம்மோற்சவம்: ‘பகாசுர வதம்’ திருக்கோலத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி

வாகன சேவையின்போது மாட வீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பகவானை தரிசனம் செய்தனர்.
திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழா, கற்பகவிருட்ச வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி
கற்பகவிருட்ச வாகனத்தில் எழுந்தருளிய மலையப்ப சுவாமி
Published on: 

திருமலை,

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவ விழாவில் இன்று பகாசுரனை வதம் செய்த அலங்காரத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளினார்.

நவராத்திரி பிரம்மோற்சவம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் காலை மற்றும் இரவில் வாகன சேவை நடைபெற்று வருகிறது. அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் மலையப்ப சுவாமி தனித்தும், தேவியர்களுடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அவ்வகையில் நான்காம் நாளான இன்று காலையில் கற்பகவிருட்ச வாகன சேவை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட கற்பகவிருட்ச வாகனத்தில், பகாசுரனை வதம் செய்த திருக்கோலத்தில் தாயார்களுடன் எழுந்தருளிய மலையப்ப சுவாமி, மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது மாட வீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பகவானை தரிசனம் செய்தனர். சிலர் கற்பூர ஆரத்தி எடுத்து வழிபட்டனர்.

பஜனைகள்

வாகன ஊர்வலத்தின்போது கோவில் யானைகள் முன்செல்ல, மங்கல இசை, பஜனைகள், கோலாட்டம் மற்றும் ஜீயங்காரர்களின் திவ்யப் பிரபந்த பாராயணம் ஆகியவை இடம்பெற்றன.

திருமலை திருப்பதி தேவஸ்தான வாரிய தலைவர் பி.ஆர். நாயுடு, நிர்வாக அதிகாரி முத்தாடா ரவிச்சந்திரா, கூடுதல் நிர்வாக அதிகாரி சி.எச். வெங்கையா சௌதரி, மாவட்ட அதிகாரிகள், வாரிய உறுப்பினர்கள் மற்றும் பிற முக்கிய பிரமுகர்கள் வாகன சேவையில் பங்கேற்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com