

ஸ்ரீகாளஹஸ்தி,
ஸ்ரீகாளஹஸ்தியில் நடைபெறும் நவராத்திரி உற்சவத்தில் நேற்று காத்யாயினி தேவி அலங்காரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் எழுந்தருளினார்.
திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் நவராத்திரி உற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று கோவிலில் மூலவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் சன்னதி எதிரே ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கொலு பொம்மைகளுக்கு தீப, தூபம் காண்பிக்கப்பட்டது. உற்சவர் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் 'காத்யாயினி தேவி' அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதேபோல் சிவன் கோவிலில் வீற்றிருக்கும் கனக துர்க்கையம்மனுக்கு மகா சரஸ்வதி தேவி அலங்காரம் செய்யப்பட்டு தீப தூபம், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தி முத்தியாலம்மன் கோவில் தெருவில் வீற்றிருக்கும் முத்தியாலம்மனுக்கு 'காத்யாயினி தேவி' அலங்காரம் செய்யப்பட்டது.
ஸ்ரீகாளஹஸ்தியை அடுத்த வேடாம் கிராமத்தில் வீற்றிருக்கும் காளியம்மன் கோவிலில் உற்சவர் அம்மன் 'ஞானப்பிரதாயனி' அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏழு கங்கையம்மன் கோவிலில் வீற்றிருக்கும் கங்கையம்மன் 'காத்யாயி