நவராத்திரி வழிபாடு.. அம்பிகைக்கு உகந்த மலர்கள் - நைவேத்தியங்கள்

தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் விதமாக அசுரனை எதிர்த்து துர்கா தேவி போர் புரிந்த ஒன்பது நாட்களையே நவராத்திரியாக கொண்டாடுகிறோம்.
நவராத்திரி விழா 2026, அம்பிகை வழிபாட்டிற்கு உகந்த மலர்கள், நைவேத்தியங்கள்
நவராத்திரி வழிபாடு
Published on: 

நவராத்திரி வழிபாட்டில் துர்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் ஒன்பது வடிவங்களை (நவதுர்கை) மகிழ்விக்க ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட மலர்களால் அர்ச்சனை செய்தும், நைவேத்தியம் படைத்தும் வழிபடுவது வழக்கம்.

அர்ச்சனைக்குரிய மலர்கள்:

முதல் நாள்- வெண்தாமரை, செந்தாமரை, மல்லிகை

இரண்டாம் நாள்-மல்லிகை

மூன்றாம் நாள் - மரிக்கொழுந்து, சம்பங்கி

நான்காம் நாள்- ஜாதிமல்லி

ஐந்தாம் நாள்- பாரிஜாதம், முல்லை

ஆறாம் நாள்- செம்பருத்தி

ஏழாம் நாள்- மல்லிகை, முல்லை

எட்டாம் நாள்- ரோஜா

ஒன்பதாம் நாள்- செந்தாமரை, வெண்தாமரை

நைவேத்தியங்கள்:

முதல் நாள்- வெண் பொங்கல்

இரண்டாம் நாள் - புளியோதரை

மூன்றாம் நாள்-சர்க்கரைப் பொங்கல்

நான்காம் நாள் - கதம்ப சாதம்

ஐந்தாம் நாள் - தயிர் சாதம்

ஆறாம் நாள் - தேங்காய் சாதம்

ஏழாம் நாள் - எலுமிச்சை சாதம்

எட்டாம் நாள் - பாயசம்

ஒன்பதாம் நாள்- அக்காரவடிசல்

நவராத்திரி விழா

தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்டும் விதமாக அசுரனை எதிர்த்து துர்கா தேவி போர் புரிந்த ஒன்பது நாட்களையே நவராத்திரியாக கொண்டாடுகிறோம். விழாவின் முதல் மூன்று நாட்கள் துர்கையை மகேஸ்வரி, கவுமாரி, வராகியாகவும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியை மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை சரஸ்வதி, நரசிம்கி, சாமுண்டியாகவும் வழிபாடு செய்வர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com