நெல்லை: அழகியகூத்தர் கோவில் ஆனி திருவிழா தேரோட்டம்

தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை முழங்கியவாறு வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
நெல்லை அருகே ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோவில் ஆனி திருவிழா
தேரோட்டம்
Published on

நெல்லை,

நெல்லை அருகே ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோவில் ஆனி திருவிழா தேரோட்டம் நடந்தது.

ஆனி திருவிழா

நெல்லை அருகே ராஜவல்லிபுரம் செப்பறை அழகியகூத்தர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனித்திருவிழா சிறப்பாக நடைபெறும். கேரிவலில் இந்த ஆண்டு ஆனி திருவிழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, தீபாராதனை மற்றும் பல்வேறு வாகனங்களில் சுவாமி ரதவீதி உலா நடைபெறுகிறது.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் அழகியகூத்தர், சிவகாமி அம்பாள் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் பக்தி கோஷங்களை முழங்கியவாறு வடம் பிடித்து இழுத்தனர்.

10-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) நடராஜருக்கு திருநடன தீபாராதனை மற்றும் ரத வீதி உலா நடக்கிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com