நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் தொடங்கியது.. பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் தேர்

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் தொடங்கியது.. பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் தேர்
Published on

நெல்லை,

நெல்லையப்பர் கோவில் விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று கோலாகலமாக தொடங்கியது.

ஆனி திருவிழா

தென்தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில்களில் ஒன்றான நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டு முழுவதும் 12 மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறும். இதில் ஆனி மாதம் நடைபெறும் ஆனிப்பெருந்தேரோட்ட திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு ஆனித் தேரோட்ட திருவிழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி-அம்பாள் வீதி உலா நடைபெற்றது.

8-ம் திருநாளான நேற்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு சுவாமி நட ராஜ பெருமாள் பச்சை சாத்தி கோலத்தில் திருவீதி உலா நடந்தது. மாலை 5 மணிக்கு சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதி உலா நடைபெற்றது.

இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் வீதி உலாவும், சுவாமி தங்க கைலாய பர்வத வாகனத்திலும், அம்மன் தங்க கிளி வாகனத்திலும் திருவீதி உலா நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும், படப்பு பூஜையும், சாமக்கொடையும் நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலாகலமாக தொடங்கியது. தேரோட்டத்தையொட்டி, அதிகாலை 4 மணிக்கு சுவாமி தேரில் எழுந்தருளினார். காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். ஆடி, அசைந்து வரும் தேரை ஆயிரக்கணக்கான மக்கள் வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். தொடர்ந்து அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் தேர்களுக்கும் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

1,200 போலீசார் பாதுகாப்பு

தேரோட்ட விழாவை முன்னிட்டு ரதவீதிகள் மற்றும் முக்கிய சாலைகள் சீரமைக்கப்பட்டன. பக்தர்களின் வசதிக்காக கோவில் ரதவீதிகளில் 5 ஆம்புலன்சுகள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. போத்தீஸ் கார்னர் பகுதியில் போலீசார் உயர்கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ரதவீதிகள் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, டவுன் போலீஸ் நிலையத்தில் கட் டுப்பாட்டு அறை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

பக்தர்களின் வாகனங்களை நிறுத்த 18 இடங்களில் இடவசதி செய்யப் பட்டு உள்ளது. கார் உள்ளிட்ட வாகனங்கள் டவுன் சாப்டர் பள்ளி மைதா னத்திலும், மோட்டார் சைக்கிள்கள் ஆர்ச் அருகே உள்ள அரசு பள்ளி வளாகத்திலும் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நெல்லை டவுன் ரதவீதி, மவுண்ட் ரோடு, போஸ் மார்க்கெட். நயினார்குளம் ரோடு உள் ளிட்ட 11 இடங்களில் தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டன. விழாவை முன்னிட்டு 1,200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டு உள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com