திருப்பதியில் விமரிசையாக நடைபெற்ற பல்லவோற்சவம்

சகஸ்ர தீபாலங்கார சேவைக்குப் பிறகு, மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோருடன் ஊர்வலமாக கர்நாடக சத்திரத்திற்கு எழுந்தருளினார்.
திருப்பதி திருமலையில் விமரிசையாக நடைபெற்ற பல்லவ உற்சவம்
பல்லவோற்சவ சிறப்பு பூஜை
Published on

திருப்பதி,

திருப்பதி திருமலையில் பல்லவோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு மிகப்பெரிய அளவில் காணிக்கைகளை வழங்கிய மைசூர் மகாராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் பல்லவோற்சவம் என்ற பெயரில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் பல்லவோற்சவம் நேற்று கொண்டடப்பட்டது.

திருப்பதி திருமலையில் நடைபெற்ற பல்லவ உற்சவத்தில் மைசூர் அரச குடும்பத்தினர் பங்கேற்றனர்
பல்லவோற்சவத்தில் மைசூ அரச குடும்பத்தினர் பங்கேற்பு

மைசூர் அரச குடும்பத்தினர் வழிபாடு

கோவிலில் சகஸ்ர தீபாலங்கார சேவைக்குப் பிறகு, மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி மற்றும் பூதேவி ஆகியோருடன் ஊர்வலமாக கர்நாடக சத்திரத்திற்கு எழுந்தருளினார். அங்கு மைசூர் அரச குடும்பத்தினர் அளித்த உபசரிப்பை அவர் ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநில அரசு மற்றும் மைசூர் அரச குடும்பத்தின் பிரதிநிதிகள் உற்சவ மூர்த்திகளை வரவேற்று சிறப்பு ஆரத்தி எடுத்தனர். சிறப்பு வழிபாடுகள் மற்றும் நைவேத்தியம் ஆகியவை நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்குப் பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சௌத்ரி, வாரிய உறுப்பினர்கள் நரேஷ் மற்றும் தர்ஷன், பேஷ்கார் ராமகிருஷ்ணா மற்றும் பிற அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com