

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா, கோப்பணம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி மாத அமாவாசையை முன்னிட்டு முன்னிட்டு அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாகி அம்மன், மாசாணி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் பரமத்தி வேலூர் பேட்டை மகா மாரியம்மன் , பகவதி அம்மன், காவேரி சாலையில் உள்ள மாரியம்மன், பழைய தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செல்லாண்டியம்மன், நன்செய் இடையாறு மாரியம்மன், காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில், பரமத்தி அங்காளம்மன், வேலூர் எல்லையம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன்,
சேளூர் மாரியம்மன், குன்னத்தூர் மாரியம்மன், அய்யம்பாளையம் பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பகவதி அம்மன் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்கள் மற்றும் குடிப்பாட்டு கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் குடிப்பாட்டு மக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.