பரமத்திவேலூர்: விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு

விநாயகர் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனைகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
விநாயகப்பெருமான்
Published on

பரமத்திவேலூர்,

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை முதலே பக்தர்கள் சிறப்பு பூஜைகளில் பங்கேற்று விநாயகப்பெருமானை வழிபட்டனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பேட்டையில் உள்ள பஞ்சமுக ஹேரம்ப விநாயகர், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள விநாயக பெருமானுக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் விநாயகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சிறப்பு அபிஷேகம்

அதேபோல் பொத்தனூர், வெங்கமேடு வல்லப கணபதி கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலஙகாரம் மகா தீபாராதனை நடைபெற்றது.

பரமத்திவேலூர் சக்திநகரில் உள்ள விநாயகர், பரமத்திவேலூர் காவிரி கரையில் அமைந்துள்ள சத்திரத்து விநாயகர், பொத்தனூர் மகா பகவதியம்மன் கோயிலில் உள்ள விநாயகர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், சேளூர், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர் வடகரையாத்தூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, கொத்தமங்கலம், பெருங்குறிச்சி, மணியனூர், பரமத்தி மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்து வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com