ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவம்.. நம்பெருமாளுக்கு சிறப்பு ஆரத்தி

பவித்ரோற்சவ நிகழ்வுகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பவித்ர உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
நம்பெருமாளுக்கு சிறப்பு ஆரத்தி
Published on

பவித்ரோற்சவம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் நம்பெருமாள் பவித்த உற்சவம் நடைபெற்று வருகிறது.

விழாவின் 6ம் நாளான நேற்று (29.08.2026) மாலை நம்பெருமாள், பவித்ர மாலைகளுடன் கூடிய சிறப்பு அலங்காரத்தில், மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். சேவை நிறைவில் நம்பெருமாளுக்கு திருவந்திக்காப்பு என்னும் சிறப்பு ஆரத்தி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இதேபோல் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் திருக்கோவிலிலும் பவித்ர உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பவித்ரோற்சவத்தின் முக்கியத்துவம்

வைணவ ஆலயங்களில் ஆண்டுக்கு ஒருமுறை பவித்ர உற்சவம் நடத்தப்படும். இது ஒரு தோஷ நிவர்த்தி திருவிழாவாகும். ஆண்டு முழுவதும் கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள் மற்றும் தினசரி வழிபாடுகளின்போது தெரிந்தும் தெரியாமலும் பல குறைபாடுகள் நடக்கலாம். இதனால் ஏற்படும் தோஷங்களை நிவர்த்தி செய்வதற்காக பவித்ர உற்சவம் நடத்தப்படும்.

இந்த உற்சவ காலத்தில் பட்டு அல்லது உயர்தர பருத்தி நூல்களால், பல வண்ணங்களில் (கருப்பு, நீலம், சிவப்பு, மஞ்சள், பச்சை) பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட 'பவித்ர மாலைகள்' யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டு, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு அணிவிக்கப்படும். திருவிழா நாட்களில் தினமும் விசேஷ திருமஞ்சனம், சிறப்பு சிறப்பு ஹோமங்கள் நடத்தப்படும்.

X

Daily Thanthi
www.dailythanthi.com