

திருவள்ளூர்,
திருவள்ளூர் திரிபுரசுந்தரி அம்பாள் சமேத அருள்மிகு தீர்த்தீஸ்வர கோவிலில், பவித்ர உற்சவம் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. உற்சவ நாட்களில் தினமும் காலை 8 மணிக்கு, மாலை 5:00 மணிக்கு தீர்த்தீஸ்வரருக்கு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
யாகசாலையில், இரு வேளைகளிலும், மண்டப பூஜை, வேதிகார்ச்சனம், மண்டல ஆராதனம், யாக வேள்வியைத் தொடர்ந்து நேற்று பவித்ர சமர்ப்பணம் நடைபெற்றது. நாளை இரவு 9:00 மணிக்கு மேல், பவித்ர உற்சவம் நிறைவு பூஜை மற்றும் பூர்ணாஹுதி நடைபெறும்.
கோவிலில் தினமும் நடைபெறும் பூஜைகளில் ஏதேனும் குறைகள் இருந்து அதனால் ஏற்பட்ட தோஷங்களை நிவர்த்தி செய்வதற்காக, ஆண்டுதோறும் பவித்ர உற்சவம் 5 நாட்கள் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.