திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெரிய சேஷ வாகன வீதிஉலா

நான்கு மாடவீதிகளில் திரண்டு இருந்த பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பெரிய சேஷ வாகன வீதிஉலா
Published on: 

திருமலை,

பெரிய சேஷ வாகன வீதிஉலா

நாகுல சவிதி புனித நாளை முன்னிட்டு நேற்று இரவு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஏழு தலைகளை கொண்ட பெரிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தங்கம், வைர நகைகளுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

நான்கு மாடவீதிகளில் திரண்டு இருந்த பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா.. எனப் பக்தி கோஷம் எழுப்பி சாமி தரிசனம் செய்தனர். வாகன வீதிஉலாவில் தேவஸ்தான கூடுதல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, இணை அதிகாரி ஏ.சரத், கோவில் துணை அதிகாரி பாஸ்கர், உதவி பறக்கும் படை அதி காரி சுரேந்திரா, பேஷ்கார் ராமகிருஷ்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

X