மிளகாய் அரைத்து பூசினால் நீதி வழங்கும் அம்மன்

நீண்ட நாள் தீராத வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்கள் இந்த அம்மனை நாடி வருகின்றனர்.
பேரூர் மகா சக்தி மாசாணியம்மன் கோவில்
பேரூர் மகா சக்தி மாசாணியம்மன் கோவில்
Published on

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூரில் மகா சக்தி மாசாணியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் உள்ள வழிபாட்டு முறை மிகவும் தனித்துவமானது. பக்தர்களிடையே மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது.

நீதி வழங்கும் அன்னை

வாழ்க்கையில் பண விஷயத்தில் ஏமாற்றப்பட்டவர்கள், நியாயமாகக் கிடைக்க வேண்டிய கடன் தொகை கிடைக்காமல் தவிப்பவர்கள் மற்றும் நீண்ட நாள் தீராத வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்கள் இந்த அம்மனை நாடி வருகின்றனர். "அம்மா, எனக்கு நியாயம் கிடைக்கச் செய்!" என்று மனமுருகி வேண்டினால், அன்னை மாசாணி நிச்சயம் வழி காட்டுவாள் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

வித்தியாசமான நேர்த்திக்கடன்

இந்தக் கோவிலின் மிக முக்கிய சிறப்பம்சமே மிளகாய் அரைத்து தடவும் வழிபாடாகும். தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதும் அல்லது நீதி வேண்டி முறையிடும்போதும், பக்தர்கள் நேர்த்திக்கடனாகச் சிலைகள் அல்லது அம்மன் பொம்மைகளை வைக்கின்றனர். காய்ந்த மிளகாயை அரைத்து, அதை அந்த சிலைகளின் மீது தடவி வழிபாடு செய்கின்றனர். இப்படிச் செய்வதன் மூலம் தீய சக்திகள் விலகி, எதிர்ப்புகள் நீங்கி, நியாயமான கோரிக்கைகள் விரைவில் நிறைவேற மாசாணியம்மன் அருள்செய்வாள் என்பது ஐதீகம்.

Also Read
பங்குனி மாத பூஜைகளுக்காக நாளை சபரிமலை கோவில் நடை திறப்பு
பேரூர் மகா சக்தி மாசாணியம்மன் கோவில்
X

logo
Daily Thanthi
www.dailythanthi.com